கண்டி, தென்னகும்புர பகுதியில் தற்போது பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன் (நள்ளிரவு 1.30) அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.
இதேவேளை, அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு பள்ளிவாசல்கள் முன்னாலும் தற்போது இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் முழுமையாக தகவல் தெரியாமல் வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்த்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment