முஸ்லிம்களின் மதஸ்த்தளங்கள் உடைக்கப்படுவதானது நல்லாட்சியில் சந்தேகத்தை உருவாக்குவதாக ஏறாவூர் சம்மேளனம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

முஸ்லிம்களின் மதஸ்த்தளங்கள் உடைக்கப்படுவதானது நல்லாட்சியில் சந்தேகத்தை உருவாக்குவதாக ஏறாவூர் சம்மேளனம் தெரிவிப்பு

முஸ்லிம்களின் மதஸ்த்தளங்கள் உடைக்கப்படுவதானது நல்லாட்சியில் சந்தேகத்தை உருவாக்குவதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எல்.வாஜித் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்... 

கடந்த எட்டு வருடகாலமாக இலங்கை முஸ்லிம்களது மதஸ்தளங்களும் பொருளாதாரமும் மிகவும் மோசமாக அழிக்கப்படுவதை கண்டித்தும் அன்மையில் அம்பாறையில் இடம் பெற்ற பள்ளிவாயல் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோருக்கு மகஜர் ஒன்றை ஏறாவூர் பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பி வைத்துள்ளோம்.

ஜனாதிபதி மைத்திபால சிரீசேனாவுக்கு இலங்கையிலுள்ள 90 வீதமான முஸ்லிம்கள் வாக்களித்து அவரை வெற்றியடைச் செய்த நிலையிலும் அவரின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் பல்வேறு மதஸ்த்தளங்கள் உடைக்கப்படுவதானது நல்லாட்சியில் சந்தேகத்தை உருவாக்குவதாகவும் இந்த நல்லாட்சியை தொடருவதற்காக இந்த நாட்டு முஸ்லிம்களும் ஏனைய மக்களும் இன்றும் மிகச் சரியான பங்களிப்பை வழங்குவதற்கு மனிதர்களின் அடிப்படை மத உரிமை பாதுகாக்கப்படல் வேண்டும் என்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படல் வேண்டும் எனவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தேவையான நீதியை செலுத்த வேண்டும் எனவும் மகஜரில் கேட்டுள்ளோம்.

இந்த நாட்டில் முப்பது வருடகாலம் இடம் பெற்ற யுத்தத்தின் விளைவால் கோடிக்கணக்கான சொத்துக்களும் இலட்சக்கணக்கான மனித உயிர்களும் காவு கொள்ளப்பட்டதை அனைவரும் அறிவோம்.

இந்த நாடு நம்பிக்கை இழக்க கூடியளவுக்கு நாட்டின் சொத்துக்கள் பொருளாதாரம் அத்தனையும் துவம்சம் செய்யப்பட்டது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட சமாதானத்தை தொடர்ந்து இலங்கை மீதான கவனம் சர்வதேச மட்டத்திலும் உள்ளுர் அரசியல் சக்திகள் மட்டத்திலும் அதிகரித்துள்ளதை நாங்கள் பார்க்கின்றோம்.

சமதானத்தை தொடர்ந்து சகல இன மக்களும் நான் ஒரு இலங்கையன் என்ற தேசிய உனர்வோடு வாழ விரும்புகின்ற வேளையில் நாட்டின் தீய சக்திகள் இனங்களுக்கிடையிலான முறுகளையும் மதங்கள் பற்றிய தப்பப்பிரயாங்களையும் உருவாக்கி குளிர்காய நினைக்கின்றனர்.

இதன் விளைவாக அப்பாவி மக்கள் நாட்டின் பொருளாதாரம் நாட்டின் மதஸ்தளங்கள் என்பன அழிக்கப்பட்டு வருவதனை நாங்கள் அறிகின்றோம்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென்று குறிப்பாக மாவனல்ல முதல் அம்பாரை வரை இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் அதே போன்று சகோதர இனங்களான தமிழ் சகோதரர்களுக்கும் கடந்த பல தசாப்தங்களாக ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களையும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வண்மையாக கண்டிக்கின்றது.

நாட்டின் சட்டத்தினையும் ஒழுங்கையும் வேறுபாடின்றி அமுல் படுத்த வேண்டும் என்றும் குற்றவாகளின் யாராக இருந்தாலும் எந்த தரப்பினராக இருந்தாலும் சட்டத்தின் முன்னாள் அவர்களை நிறுத்தி நீதியை நிலை நாட்ட நடடிவடிக்கை எடுக்க வேணடும்.

எல்லா மதங்களையும் சார்ந்த வணக்க வழிபாட்டு தளங்களோ தனிமனித பொருளதார தளங்களோ அழிக்கப்படுகின்ற போது அல்லது அநியாயமாக கபழீகரம் செய்யப்படுகின்ற போது அதற்கான நஷ்ட ஈட்டை நாட்டின் அரசாங்கம் வழங்க வேண்டுமென ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியையும் எமது ஏறாவூர் பள்ளிவாயல் சம்மேளனம் கேட்டுக் கொள்கின்றது என மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment