இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் 2 பள்ளிவாசல்கள், 4 வீடுகள் மற்றும் 5 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன. திகன நகரில் உள்ள மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், தெல்தெனிய பள்ளிவாசலும் சேதமடைந்துள்ளது.
நேற்றிரவு முதல் நிலவி வரும் வன்முறை சூழலின் பின்னணியில் இவைகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய மரண ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் கணிசமான எண்ணிக்கையான வீடுகளுக்கு கல்வீச்சு இடம்பெற்றுள்ளதுடன் பல இடங்களில் வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
திகன வரை மரண ஊர்வலம் செல்வதற்குத் தடையிருந்த போதிலும் ஏனைய பகுதிகளில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றதுடன் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் விளைவுகளை தடுக்கவல்லதாக இருக்கவில்லையென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். திகன உட்பட சூழவுள்ள பல முஸ்லிம் பகுதிகள் பாதிப்புக்கள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment