டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது - உலக சுகாதார ஸ்தாபனம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். 

விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.

ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. 

உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்” என்றார்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad