"பழகிப்பார், பாதிப்பேர் மிருக ஜாதிதான்" - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 21, 2021

"பழகிப்பார், பாதிப்பேர் மிருக ஜாதிதான்"

சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் நல்லதொரு சந்தர்ப்பத்தை தந்துள்ளன. சிக்கலில் மாட்டிக் கொண்ட சக நண்பர்களை மேலும் சிக்கலில் மாட்டி, அரசியல் குளிர்காய நினைக்கும் மனநிலையில் செயல்படும் இவர்களது நடவடிக்கைகளால் பலர் கவலையடைந்துள்ளனர்.

எத்தனையோ விடயங்கள் மலையகச் சமூகத்தில் நடைபெறுகையில், ரிஷாட்பதியுதீனின் வீட்டில் நடைபெற்ற தீப்பற்றிக் கொண்ட விடயத்தை இவர்கள் தூக்கிப்பிடிப்பதேன்.?

மக்களைக் கவரும் உருப்படியான அரசியல் திட்டம் இவரிடம் இல்லை. இதனால், அனுதாப அலையைத் திரட்டும் தந்திரோபாயத்தை இவர் கையிலெடுத்துள்ளனர்.

அப்பாவிச் சமூகத்தை அனுதாப உணர்வில் ஏமாற்றி, தனது வங்குரோத்து அரசியலை மறைக்கும் உபாயம்தான் மனோகணேசன் கூட்டத்தின் முதலைக் கண்ணீர்.

தொழில், உழைப்பு ரீதியாகச் சுரண்டப் படும் மலையக மக்களின் துயர்போக்குவதற்கு அறிக்கைகளைத்தவிர மனோகணேசன் கம்பனி எதைச் செய்தனர்?

டயகம சகோதரியின் தாயைப் போன்று எத்தனை தாய்மார்கள் இன்னும் அவதியுறுகின்றனர். இத்தாய்மார்களின் பொருளாதார இயலாமைகளை ஒழிக்க, தனது சொந்தப் பணத்தில் ஒரு ரூபாவையாவது மணோ கம்பனியினர் வழங்கியிருப்பார்களா? இதற்கும் வக்கில்லாத இவர்கள் தான், தேவைக்கேற்றவாறு இவ்விடயத்தை திசை திருப்பிவிடுகின்றனர்.

அரசியலில் சோபையிழந்து கிடக்கும் இவர்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் இழந்த செல்வாக்கினை மீளப் பெற்றுக்கொள்வதற்காகவும் இ. தொ. காவிடம் கடந்த தேர்தலில் மூக்குடைப்பட்டதை மறைப்பதற்காகவும் இந்த விவகாரத்தை யுக்தியாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

மனோவுடன் கம்பனியுடன் பழகும் எவரும் இனி, எட்டா உறவுடன்தான் இருக்கப்போகின்றனர். எட்டியுதைக்கும் உறவைவிடவும், ஒட்டா உறவு மேலென்பதும் இதற்காகத்தானோ?

"மச்சான் ரிஷாட், மச்சான் ரிஷாட்" எனப் பழகிய இவர்களது எச்சில்களும் படக்கூடாதென்று தான் இனிப்பழகப் போகின்றனர்.

எட்டி நின்று உதைக்கும் உறவை
விடவும் ஒட்டா உறவே இனியினிது.

கிருஷாந்தன் ஹட்டன்

No comments:

Post a Comment