ஊடகங்களை அடக்குவது நாமல்ல எதிர்க்கட்சியினரே, நாட்டில் முதலீடுகளை செய்ய யாரும் முன்வரலாம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

ஊடகங்களை அடக்குவது நாமல்ல எதிர்க்கட்சியினரே, நாட்டில் முதலீடுகளை செய்ய யாரும் முன்வரலாம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

ஊடகங்களை அடக்குவது நாமல்ல எதிர்க்கட்சியினரே என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தால் தொடர்சியாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக புதன்கிழமை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தற்போது இருக்கின்ற கொரோனா சூழ்நிலை காரணமாகத்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்றது, அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ ஊடகங்களையோ ஊடகவியலாளர்களையோ ஒருபோதும் அச்சுறுத்துவதில்லை.

எதிர்க்கட்சியினர்தான் இவ்வாறு கூறுகின்றனர், அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது, வர வேற்கின்றது எதிர்க்கட்சியினரே இவ்வாறு போலியாக அரசங்கத்தின் மீது பலி கூறுவதை நான் பார்க்கின்றேன்.

நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும், வெளிநாடுகளில் கடன் வாங்க வேண்டும் அல்லது மக்களிடம் வரி எடுக்க வேண்டும் மக்களிடம் வரி எடுப்பது என்பது எமது நாட்டைப் பொறுத்த வரையில் மக்களுக்கு பாரிய சுமையாக மாறிவிடும்.

கடன் வாங்குவது என்பது சிக்கலான ஒரு விடயம், பாரிய முதலீடுகளை கொண்டு வருவது என்பது மிக முக்கியமானது நாட்டினுடைய இறைமைக்கு பௌதிக வளத்திற்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில்தான் அரசாங்கம் சில திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

முதலீட்டை பொருத்த வரையில் யாரும் நாட்டுக்குச் செய்ய முன்வரலாம் இந்தியாவாக இருக்கலாம் சீனா மற்றும் அமெரிக்காவாக இருக்கலாம் எவராக இருந்தாலும் முதலீடுகளை கொண்டு வரலாம் என்பதைத்தான் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அன்றும் தெரிவித்திருந்தார்.

இந்த முதலீடுகளின் மூலமாக எம்மவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமாக இருந்தால் அதை நாங்கள் வரவேற்போம். அமைச்சர் பசில் ராஜபக்ஷ தூர நோக்குள்ள ஒருவர் பல அபிவிருத்திகளை செய்துள்ளார். அவருடைய வருகை மிக முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment