பிரதமரை சந்தித்த முஸ்லிம் எம்.பிக்கள் : முக்கிய பிரச்சினைகளுக்கு பச்சை கொடி காட்டினார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

பிரதமரை சந்தித்த முஸ்லிம் எம்.பிக்கள் : முக்கிய பிரச்சினைகளுக்கு பச்சை கொடி காட்டினார்

நூருல் ஹுதா உமர்

அண்மையில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த மாடறுப்பு தொடர்பிலான சுற்றுநிருபம் முதல் முஸ்லிங்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரை திங்கட்கிழமை காலை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியதாக அங்கு கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் முஸ்லிம் எம்.பிக்களுக்கு பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் செய்திகளுக்காக தொடர்புகொண்டு கேட்டபோது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் சந்திப்பு தொடர்பில் பேசிய அவர், சந்திப்பின் போது மாடறுப்பு முதல் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு சமகால நிலைப்பாட்டை முழுமையாக விளக்கியதாகவும் இதன் மூலம் நாட்டின் சமச்சீர் பாதிக்கப்படும் விதம் தொடர்பில் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் சமசிங்கவிடமும் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இவ்விடயங்கள் தொடர்பில் பிரதமர் தரப்பிலிருந்து சாதகமான நிலைப்பாடே கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அல்ஹாபிழ் இஸட் நஸீர் அஹமட், இசாக் ரஹ்மான், அலி சப்ரி றஹீம், சட்டத்தரணி முஷாரப் முதுநபீன், மர்ஜான் பழீல் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment