இலங்கையில் டெல்டா திரிபு பரவலாக பரவும் ஆபத்து, தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் : அமைச்சர் சன்ன ஜயசுமன - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

இலங்கையில் டெல்டா திரிபு பரவலாக பரவும் ஆபத்து, தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் : அமைச்சர் சன்ன ஜயசுமன

இலங்கையில் கொவிட் வைரஸின் டெல்டா திரிபு பரவலாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் டெல்டா திரிபு முக்கியமான திரிபாக மாறி வருகிறது. இலங்கை மாத்திரம் இதில் இருந்து விடுபட முடியாது என நான் நினைக்கின்றேன்.

இதனால், டெல்டா திரிபு இலங்கைக்குள் பரவலாக பரவாலாம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனினும் எமக்கு தற்போது கிடைத்து வரும் சைனாபார்ம், எஸ்ட்ராசெனேகா, மொடர்னா, பைசர் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் டெல்டா திரிபில் இருந்து தப்பிக்க விசேட தற்காப்பு தடுப்பூசி என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றினாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இதனால் தடுப்பூசி மிகவும் முக்கியமானது.

அதேபோல் தென் அமெரிக்காவின் பெரு நாட்டை கேந்திரமாக கொண்டு உருவாகியுள்ள லெம்டா என்ற திரிபு பல நாடுகளில் பரவி வருகிறது.

அதேபோல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவ ஆரம்பித்த எப்ஸ்சலைன் என அழைக்கப்படும் மற்றுமொரு புதிய திரிபு தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது.இவை அனைத்து குறித்தும் நாங்கள் அவதானத்துடன் இருந்து வருகிறோம் என சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad