கூட்டணியிலிருந்து ரிஷாத்தை நீக்காமல் உள்ளது ஏன்?, அவரின் பணத்தில்தான் உங்கள் கட்சி ஓடுகின்றது - மஹிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

கூட்டணியிலிருந்து ரிஷாத்தை நீக்காமல் உள்ளது ஏன்?, அவரின் பணத்தில்தான் உங்கள் கட்சி ஓடுகின்றது - மஹிந்தானந்த

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சதொச கொள்ளை, வீட்டில் பணிப் பெண்ணாக இருந்த மலையக சிறுமியின் மரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள ரிஷாத் பதியுதீனை எதிர்க்கட்சியிலிருந்து ஏன் நீக்காதுள்ளனர்? என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் எதிர்கட்சியினரை பார்த்து மேலும் கூறுகையில், ரிஷாத் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அத்துடன் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்தவுடன் ரிஷாத் பதியுதீனுக்கு ''ஹார்ட் அட்டாக்'' வந்து அவர் வைத்தியசாலையில் படுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சதொச கொள்ளை, வீட்டில் பணிப் பெண்ணாக இருந்த சிறுமியின் மரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளான ரிஷாத் பதியுதீனை உங்கள் கட்சியில் வைத்துக் கொண்டுதான் எமக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்றீர்கள். அவ்வாறு கொண்டு வருவதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சதொச கொள்ளை, வீட்டில் பணிப் பெண்ணாக இருந்த சிறுமியின் மரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளான ரிஷாத் பதியுதீனை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து உங்களால் நீக்க முடியுமா? முடியாது. ஏனெனில் அவரின் பணத்தில்தான் உங்கள் கட்சி ஓடுகின்றது. அப்படியில்லையென்றால் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி காட்டுமாறு உங்களுக்கு சவால் விடுக்கின்றேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad