கோட்டாபய வீழ்ச்சியடைகிறார் - மொட்டு கூறு­கி­றது - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

கோட்டாபய வீழ்ச்சியடைகிறார் - மொட்டு கூறு­கி­றது

கொவிட்-19 ஐ கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக போடப்­பட்ட “லொக்­டவுன்“ கால எல்­லைக்­குள்ளும் இலங்­கையில் எல்­லை­ மீ­றிய அர­சியல் (நோக்­கத்­து­ட­னான) நட­வ­டிக்­கை­களும் அதி­க­மாக மேற்கொள்ளப்பட்­டன. 

ஆளும் கட்­சியின் உள்­ள­கத்­தி­லி­ருந்து உரு­வா­கிய மிக மோச­மான குழப்­பங்­களே அதில் முத­லி­டத்தைப் பெறு­கி­றது. அந்தக் குழப்பநிலை இன்­று­ வரை மாற­வில்லை அது ஒரு போதும் மாறுவதற்கும் இட­மில்லை.

கடந்த ஒரு சில வார காலத்தில் நடை­பெற்ற அர­சியல் செயற்­பா­டுகள் பற்றி புதி­தாக விளக்­க­ம­ளிக்க வேண்­டி­ய­தில்லை. நாட்டில் அர­சியல் அறி­வுள்ள எவ­ருக்கும் அவை பற்றி இல­கு­வாக விளங்கிக் கொள்ள முடியும். 

அதன்­படி வெளித் ­தோற்­றத்தில் அரசு அரங்­கேற்றி வரும் நாடகங்களையும் விளங்கிக் கொள்­வ­துடன் அவை பற்­றிய எமது கவனத்­தையும் செலுத்த முடியும்.

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஒரு தோல்­வி­ய­டைந்த ஆட்சியாளன் என்­பதும் அவ­ரது புகழ் படிப்­ப­டி­யாக வீழ்ச்­சியை நோக்கிப் போகி­றது என்­பதும் ஆளும் கட்­சியில் அங்கம் வகிக்கும் மிகப் பலம் வாய்ந்த தூண்­களும் ஏற்றுக் கொண்­டுள்­ள உண்மை. 

அதே­வேளை கோட்­டா­ப­யவின் இடத்தை பெஸில் ராஜ­ப­க்ஷவைக் கொண்டு நிரப்­பு­வ­தற்கு மொட்டில் அங்கம் வகிக்கும் பெரும் “புள்ளிகள்” முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வது தெரி­கி­றது.

கடந்த சில நாட்­க­ளுக்கு முன் ஏற்­பட்ட எரி­பொருள் விலை­யேற்­றமே அப்­பி­ரச்­சி­னைக்­கான முதற் கார­ணி­யாகும். அரசின் வாழ்க்கைச் செலவு பற்­றிய குழு­வினர் தீர்­மா­னங்­க­ளுக்கு ஏற்ப நிதி­ய­மைச்­ச­ரான பிர­த­மரும், ஜனா­தி­ப­தியும் கலந்­து­ரை­யா­டிய பின் எரி­பொருள் விலையை அதி­க­ரிப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்­கை­களை மேற்கொண்டது. அரசின் அந்த முடிவை நாட்டு மக்­க­ளுக்கு தெளிவுபடுத்தும் முயற்சியைத்தான் அமைச்சர் உதய கம்­மன்­பில செய்தார். 

அவர் (அமைச்சர் உதய கம்­மன்­பில) அவ்­வாறு அறி­வித்து 72 மணித்தியாலங்கள் கழி­வ­தற்கு முன் பெஸில் ராஜ­பக்ஷ அவரை மிக மோச­மாக தாக்கிப் பேசினார். அதன் பெறு­பே­றாக “பொது­ஜன பெரமுன” கட்­சியின் செய­லா­ள­ரான “சாகர காரி­ய­வசம்” அமைச்சர் உதய கம்­மன்­பிலவை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்தும் வில­கும்­படி கேட்டுக் கொண்டார். 

கம்­பஹா மாவட்­டத்தின் “நிமல் லன்ஸா” இந்த சந்­தர்ப்­பத்தில் பெஸில் ராஜ­பக்ஷ இலங்­கையில் இருந்­தி­ருந்தால் எரி­பொருள் விலை உயர்­வுக்கு ஒரு போதும் இடம் தந்­தி­ருக்­க­மாட்­டார் என்று கூறினார். 

ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவின் தலை­மைத்­துவம் ஆட்டம் கண்டு வருகி­றது என்­பதே மேற்­படி இரண்டு கூற்­று­க­ளி­லி­ருந்தும் தெளிவாகிறது.

அமைச்­சர்­க­ளையும், ராஜாங்க அமைச்­சர்­க­ளையும், பிரதி அமைச்சர்­க­ளையும், அமைச்­சர்­களின் செய­லா­ளர்­க­ளையும் ஜனாதிப­தியே நிய­மிக்­கின்றார். அவ்­வாறு நிய­மனம் செய்­யப்­படும் அமைச்­சர்­களை பத­வி­யி­லி­ருந்தும் நீக்­கு­வ­தற்கும் அமைச்சுப் பதவிகளில் மாற்­றங்கள் செய்­வ­தற்கும் ஜனா­தி­ப­தியே அதி­காரம் பெற்­றுள்ளார். 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தின்­படி அந்த அதிகாரம் முழுமையாக ஜனா­திபதிக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது. 

அதன்­படி ராஜாங்க அமைச்சர் ஒரு­வரை பதவி வில­கும்­படி ஒருவர் கூறு­வா­ரே­யானால், அது நேர­டி­யா­கவோ மறைமு­க­மா­கவோ ஜனாதிப­தியின் கட்­ட­ளையின் பிர­காரம் நடை­பெற்ற ஒரு செயலாகவே கரு­தப்­படல் வேண்டும். அவ்­வா­றி­ருந்தும் ஜனாதிபதியால் நிய­மனம் செய்­யப்­பட்ட ஒரு ராஜாங்க அமைச்­சரை பதவி விலகும் படி மற்­று­மொ­ருவர் கூறு­வா­ரானால் அது ஜனாதிபதியின் அதி­கா­ரத்தில் கைவைக்­கப்­பட்­ட­தாக கருத முடியுமல்­லவா? ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட அமைச்சர் ஒருவர் அப்­ப­த­வியை சரி­வர நிறை­வேற்ற தகு­தி­யற்­ற­வ­ரா­கவும் கணிக்கப்படலாம் அல்­லவா?

நிமல் லன்ஸா மிகவும் பார­தூ­ர­மான கருத்­தொன்­றைத்தான் வெளியிட்­டுள்ளார். “பெஸில் ராஜ­பக்ஷ இலங்­கையில் இருந்­தி­ருந்தால் எரி­பொருள் விலை­யேற்­றத்தை ஒரு போதும் அனுமதித்திருக்கமாட்டார்” என்று அவர் கூறி­யதன் பின்­னணி என்ன? 

தற்­போது உலக சந்­தையில் எரி­பொருள் விலை அதி­க­ரித்துச் செல்லும் ஒரு சூழ்­நிலை காணப்­ப­டு­கி­றது. மேலும் இலங்­கையின் பொரு­ளா­தா­ரமும் வீழ்ச்­சி­ய­டைந்­து­ வரும் இந்த கால கட்­டத்தில் எரிபொருள் விலையை உள்­நாட்டில் அதி­க­ரிக்க விடாமல் அதை முகா­மைத்­துவம் செய்யும் அபார அறிவைக் கொண்­ட­வரே பெஸில் என்­ப­து­தானே அதன் கருத்து. 

அவர் (பெயரில்) நாட்­டுக்கு வெளியே இருக்கும் சந்­தர்ப்­பத்தில் கூட இலங்­கை­யி­லுள்ள ஜனா­தி­பதி உட்­பட எந்த ஒரு அமைச்­ச­ருக்கும் பெஸில் ராஜ­ப­க்ஷ­வுக்கு இருக்கும் திறமை இல்லை என்­ப­து­தானே அதன் கருத்து.

கடந்த ஜூன் 20ஆம் திகதி கண்டி (திகன) யில் நடை­பெற்ற ஒரு கூட்டத்தில் கலா­நிதி ரஞ்சித் பண்­டார இவ்­வா­றாகக் கூறி­யுள்ளார். 

அவர் பெஸிலின் ஒரு நண்பர் என்று கூறு­வதை விட அவர் பெஸிலின் ஒரு பக்தர் என்றே கூற­ வேண்டும். பத்­த­ர­முல்லயில் உள்ள நெலும் மாவத்தைப் பகு­தியில் “மொட்டுக் கட்­சியின் காரி­யா­ல­யத்­துக்­காக அவர் (கலா­நிதி ரஞ்சித் பண்­டார) தனது வீட்­டையே கொடுத்­துள்­ளார் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.“ 

இந்த நாட்டின் ஜனா­தி­பதி பத­வியில் இருப்­ப­தற்கு பெஸில் ராஜபக்ஷவுக்கு என்ன தகுதி இருக்­கி­றது என்று ஒருவர் வினாவொன்றை எழுப்­பினால் அதற்­கான அனைத்து தகு­தி­களும் அவ­ரிடம் உண்டு. 

பெஸில் அவர்கள் இந்த கால கட்­டத்தில் இலங்­கையில் இருந்தால் எரிபொருள் விலையை அதி­க­ரிக்க இட­ம­ளித்­தி­ருக்க மாட்டார். 2005 இல் கோட்டாபய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ப­தற்கு மூல கார­ணி­யாக இருந்­தவர் பெஸில் ராஜ­ப­க்ஷதான். பெஸில் ராஜபக்ஷவின் திரு­கு­தா­ளங்கள் மற்றும் கடு­மை­யான முயற்­சியின் அடிப்­ப­டை­யி­லான முகா­மைத்­து­வத்தின் கார­ண­மா­கவே 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார். 

பொதுஜன பெர­முன கட்­சியை உரு­வாக்கி அர­சாங்­க­மொன்­றையும் பத­வி­யேற்கச் செய்து அதற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்­ளவும் வலது கையாக செயல்­பட்­ட­வரும் பெஸில்தான். 

இவை­யெல்லாம் செய்­து சாதனை படைக்க முடி­யு­மாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுத்து, ஜனா­தி­ப­தி­யாக பதவியேற்ப­தற்கு அவ­ருக்கு தகு­தி­யில்­லையா?“ கலா­நிதி ரஞ்சித் பண்­டார இவ்­வா­றுதான் சுருக்­க­மாக தனது உரையை முடித்தார்.

மொட்டுக் கட்­சியில் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி கோட்டாபயவுக்கு இரண்டு வரு­டங்கள் கழி­வ­தற்கு முன்னே புதிய ஜனா­தி­ப­தி­யாக போட்டி போடு­வ­தற்கு அபேட்­சகர் ஒரு­வரைத் தெரிவு செய்­ய ­வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. 

மீண்டும் ஒரு தடைவ ஜனா­தி­ப­தி­யாக போட்டி போடும் அள­வுக்கு கோட்­டா­பய பிர­கா­சிக்­க­வில்லை. அவர் தோல்விக் கம்­பத்தை நோக்கி வேக­மாக வீறு­நடை போட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். 

என்­றாலும் அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் ராஜ­பக்ஷ குடும்பத்திலிருந்தே ஒரு­வரைத் தெரிவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளது. 

20ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் படி அமெ­ரிக்க பிர­சை­யாக இருந்து கொண்டே பெஸி­லுக்கு இலங்கை­யிலும் ஜனா­தி­ப­தி­யாக பதவி­யேற்க முடியும்.

மூன்று சகோ­த­ரர்­களால் (மகிந்த, கோட்­டா­பய மற்றும் பெஸில்) அரங்­கேற்­றப்­படும் இந்த நாட­கத்தில் பொருத்­த­மற்ற சில காட்­சிகள் வர­ மு­டியும். வந்­த­து­முண்டு. 

கடந்த சில நாட்­க­ளுக்கு முன் உதய கம்­மன்­பில­வுக்கும், விமல் வீரவன்­ஸ­வுக்கும் எதி­ராக நடை­பெற்­றவை இந்த நாட­கத்தின் சில சோகக் காட்­சி­க­ளாகும். அதில் கம்­மன்­பி­ல­வுக்கு அவ­ர் அமைச்சுப் பத­வியில் இருந்தும் வில­க­ வேண்­டு­மென அச்­சு­றுத்­தப்­பட்­டது. 

அடுத்­த­தாக இதுவரை காலம் விமல் வீர­வன்­ஸவின் அமைச்சின் கீழ் இயங்கி வந்த “பொஸ்பேட் கம்­பனி” தற்போது மஹிந்­தா­னந்­த அலுத்கம­கே­யிடம் கைமா­றப்­பட்­டது. இது இது­வரை காலம் இலங்கையில் பாரிய இலா­பத்தை ஈட்­டித்­தந்­தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட­கத்தில் பொருத்­த­மற்ற சில காட்­சி­களும் அரங்கேறியுள்ளன. கோட்­டா­வினால் விமல் வீர­வன்­ஸவின் அமைச்சிலி­ருந்தும் சில பகு­தி­கள் விடு­வித்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவ் விட­யங்கள் பெஸிலின் சக்­திக்கு அப்­பாற்­பட்ட நிலையில் தான் நடை­பெற்­றுள்­ளன. 

அடுத்­தது எரி­பொருள் விலை­யேற்றம் பற்­றிய விடயம் அரசின் கொள்­கைக்­கேற்­பவே நடை­பெற்­றுள்­ள­தே­யன்றி அது கம்மன்பிலவின் தனிப்­பட்ட முயற்­சி­யல்ல என்­பதை ஜனா­தி­பதி செய­லாளர் காரி­யா­ல­யத்­தி­லி­ருந்து அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதேவேளை இந்த நாட­கத்தில் பொருத்­த­மான சில காட்­சி­களும் உள்ளன.

20ஆவது அர­சியல் யாப்புத் திருத்­தத்தின் படி இரட்டை பிரஜையொருவ­ருக்கு இலங்­கையில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்க முடியும். 

கம்­மன்­பி­லவும், விமல் வீர­வன்­ஸவும் அந்த சட்­டத்­துக்கு எதி­ரா­கவே இயங்­கினர். அந்த வேளையில் கோட்டா­ப­யவே ஜனா­தி­ப­தி­யாக இருந்தார். இரட்டை பிரஜா உரி­மைக்கு தடை விதித்தால் அதன் மூலம் (ராஜ­பக்ஷ குடும்­பத்தில்) பாதிக்­கப்­படும் ஒரே நபர் பெஸில் ராஜ­ப­க்ஷதான்.

இரட்டை பிர­ஜை­யான பெஸி­லுக்கு அவ்­வாறா­னதோர் சலுகை வழங்கப்­படக் கூடாது என்ற நோக்­கத்­திற்­கா­கவே கம்­மன்­பி­லவும், விமல் வீர­வன்­ஸவும் 20ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை உள்­ள­வர்­க­ளுக்கு பாரா­ளு­மன்ற பிரதிநிதியா­கலாம் எனும் சட்­டத்தை ஏற்க மறுத்­தனர். 

2020 ஆகஸ்டில் நடை­பெற்ற பொதுத் தேர்த­லுக்கு முன்­பி­ருந்தே விமல் வீர­வன்ஸ அந்த நிலைப்­பாட்டில் இருந்தார். 

கொழும்பு மாவட்­டத்தில் “மொட்டு“ பட்­டி­யலில் முத­லா­வது இடத்துக்கு வர­வி­ருந்த வீர­வன்­ஸ ஓரங்­கட்­டப்­பட்டார். அம்­பா­றையில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சரத் வீர­சே­க­ரவைக் கொண்டு அரசாங்கம் வீர­வன்­ஸவின் இடத்தை நிரப்­பி­யது. அதன்­படி கொழும்பில் போட்­டி­யிட்ட விமல் வீர­வன்­ஸவை விட மிகக்கூடிய வாக்­குகளைப் பெற்று “மொட்டு“ கட்­சியில் மிகக்­கூ­டிய விருப்பு வாக்கு­களைப் பெற்­ற­வ­ராக சரத் வீர­சே­கர முன்­ன­ணிக்கு வந்தார்.

அரசு கம்­மன்­பி­ல­வுக்கு தாக்­கு­தலை ஏற்­ப­டுத்­திய கார­ணத்தால் அரசின் 12 சிறிய கட்சிகள் ஒரு குறுகிய காலம் மௌனம் காத்த பின் நித்திரையில் இருந்தும் விழித்துக் கொண்டது. அக்காட்சிகள் கம்மன்பிலவை பாதுகாத்த வண்ணம் அறிவித்தலொன்றையும் வெளியிட்டது. 

தற்­போ­தைய அரசை பத­வியில் அமர்த்­து­வ­தற்கு தன்னை முழுமையாக அர்ப்­ப­ணித்த சிறிய கட்­சி­களை ஓரங்­கட்டும் முயற்சியில் ஈடு­பட்­டுள்ள அரசை ஸ்ரீ.ல.சு. கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர கடு­மை­யாக சாடினார்.

மேற்­படி அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்து பார்க்­கு­மி­டத்து எதிர்­கால “மொட்டு“ வெடித்து சிதறும் அள­வுக்கு நெருப்புத் தனலை கக்கிக் கொண்­டி­ருப்­பது தெரி­கி­றது. 

அதேபோன்று “ராஜ­பக்ஷ குழு“ நாட்டைக் காப்­பாற்­று­வ­தற்குக் கிடைத்த கடைசி சந்­தர்ப்­பத்­தையும் இழந்து வெற்­றி­க­ர­மாக ஒருவரோ­டொ­ருவர் மோதிக் கொண்­டி­ருப்­பதைக் காணலாம். 

“56” மற்றும் அதன் பின் பிறந்த மொட்டுக் குழந்­தை­க­ளிடம் கேட்க வேண்­டிய முக்­கி­ய­மான கேள்­வி­யொன்று உள்­ளது. 

கோட்டா­ப­ய­வுக்குப் பின் அடுத்த ஜனா­தி­பதி அபேட்­ச­கரும் ராஜ­பக்ஷ இல்லத்திலிருந்துதான் தெரிவு செய்யப்படுவாரா என்பதுதான் அந்தக் கேள்வி. 

சிங்­க­ளத்தில் : ‘அனித்தா’ பத்­தி­ரிகை
தமிழில் : எம்.எச்.எம். நியாஸ்
Vidivelli

No comments:

Post a Comment