ஜேர்மனில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 30 பேர் மாயம் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

ஜேர்மனில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 30 பேர் மாயம்

மேற்கு ஜேர்மனிய நகரமான ஷுல்ட், ரைன்லேண்ட்-ஃபால்ஸில் ஆறு வீடுகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் காணாமல் போயுள்ளனர்.

பலத்த மழை காரணமாக நிம்ஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, குறித்த பகுதிக்குள் புகுந்ததன் விளைவாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஜேர்மனியின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்ததால், நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்தில் ரயில், வீதி மற்றும் நதிப் போக்குவரத்துகள் சீர் குலைந்துள்ளன.

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்து சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ மீட்பு படையினரும், இராணுவத்தினரும் போராடி வருகின்றனர்.

ஜேர்மனிய வானிலை சேவை புதன்கிழமை மூன்று மேற்கு மாநிலங்களின் சில பகுதிகளுக்கு ஒரு தீவிர வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad