கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில், எந்தெந்த அணிகள் எந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவுப்படுத்தும் குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இந்தச் சுற்றுக்கு சுப்பர்-12 எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள அணிகள் அடங்கிய பட்டியலில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை விட மோசமான நிலையில் உள்ளது.
இதேவேளை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பட்டியலின் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன. ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண 2021 தொடரின் போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளன.
ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சூப்பர் 12 பிரிவில் குழு 1 மற்றும் குழுப் 2 என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் குழு 1 இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளும், குழு 2 இல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம்பெறுகின்றன.
இவை தவிர, குழு A மற்றும் குழு B என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குழு A யில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு B யில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.குழு A மற்றும் குழு B அணிகளில் வெற்றி பெறும் அணிகள் முறையே குழு 1 மற்றும் குழு 2 ஆகியவற்றில் இடம் பெறும்.இதேபோன்று, குழு A யில் 2 ஆவதாக இடம்பெறும் அணி குழு 2 இலும் , குழு B யில் 2 ஆவதாக இடம்பெறும் அணி குழு 1 லும் இடம்பெறும்.
இந்த தொடர், இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சார்பாகவே நடைபெறுகின்றது.
டுபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு இடங்களில் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் போட்டிகள் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment