இந்தியாவில் செல்பி எடுத்த 16 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

இந்தியாவில் செல்பி எடுத்த 16 பேர் பலி

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செல்பி எடுத்த போது மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று இடம் பெற்றுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்துதவர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கண்காணிப்புக் கோபுரமானது 12 நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரபலமான சுற்றுலா தலமான அமர் கோட்டையில் உள்ளது.

மின்னல் தாக்கிய நேரத்தில் 27 பேர் அந்த கண்காணிப்புக் கோபுரத்தின் மீது இருந்துள்ளனர். மின்னல் தாக்கியதும் கோபுரத்தில் இருந்து பலர் கீழே குதித்துள்ளனர். அதில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னல் தாக்கி சராசரியாக ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

கண்காணிப்புக் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில் இறந்துபோன பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad