தரம் 01 இற்கு மாணவர்களை இணைக்கும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

தரம் 01 இற்கு மாணவர்களை இணைக்கும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

2022 தரம் 01 இற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பான விண்ணப்ப முடிவுத் திகதி ஓகஸ்ட் 07 ஆக நீடிக்கப்பட்டுள்ளது

தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், இவ்வாறு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மே 30ஆம் திகதி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த விண்ணப்பம் கோரல் தொடர்பான இறுதித் திகதி ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓகஸ்ட் 07 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad