இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து விலகியது ரஷ்யா - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து விலகியது ரஷ்யா

இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா அதிகாரபூர்வமாக விலகியுள்ளது.

அமெரிக்கா மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் இணையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போன நிலையில், திங்கட்கிழமை சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகும் ஒப்பந்தத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையெழுத்திட்டார். 

இதன் மூலம் ரஷ்யாவின் இராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகள் கண்காணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கடந்த 2002ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இராணுவக் கட்டமைப்புகளைக் கண்காணித்துள்ளன. 

இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா நடந்து கொண்டதாகக் கடந்த ஆண்டில் குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் என்று ரஷ்யா எதிர்பார்த்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா எந்த முடிவும் எடுக்காத நிலையில், சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment