''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு” திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு டயாலிசிஸ் இயந்திரம் கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு” திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு டயாலிசிஸ் இயந்திரம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவில் உருவானதும் நாடு பூராவும் நடைமுறைப்படுத்துவதுமான "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத்திட்டத்தின் 16 ஆவது கட்டமாக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு இருபத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் (2,320,000.00) ரூபா பெறுமதி வாய்ந்த Dialysis Machine 01 உபகரணம் நன்கொடையாக இன்று (22) வழங்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் அவர்களிடம் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிரேஷ்ட பிரதித் தலைவர் ராஜித சேனாரத்ன, வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், டி.சித்தார்தன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad