இரு பலஸ்தீனிய அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

இரு பலஸ்தீனிய அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்

மேற்குக் கரை நகரமான ஜெனினில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மோதல்களில் இஸ்ரேலிய படையினர் இரு பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது பலஸ்தீனியர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து உடனடியாக பதில் எதுவும் வரவில்லை.

அந்நாட்டு ஊடகங்களில் பரப்பப்பட்ட ஒரு சுவரொட்டி இறந்த இருவரையும் பலஸ்தீனிய ஆணையத்தின் இராணுவ புலனாய்வுப் படையின் உறுப்பினர்கள் என அடையாளம் கண்டுள்ளது.

பலஸ்தீனிய அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையோரப் பகுதிகளில் இஸ்ரேலிய சோதனைகள் பொதுவான சம்பவம் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad