மசாஜ் நிலையம் முற்றுகை; 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

மசாஜ் நிலையம் முற்றுகை; 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது

செ. தேன்மொழி

கல்கிஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மசாஜ் நிலையமொன்றும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமைகளை கருத்தில் கொள்ளாதும் சட்டத்திற்கு முரணான வகையிலும் செயற்படும் அனைவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad