யாழில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

யாழில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த விடயம் குறித்து அறிந்த யாழ்ப்பாண பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள், தொழுகையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad