தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினம் - ரொஷான் ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினம் - ரொஷான் ரணசிங்க

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து இம்மாத காலத்திற்குள் உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினமாகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் சவால்மிக்கதாக காணப்படுகிறது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அமைச்சரையில் சமர்ப்பித்துள்ள யோசனை குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. யோசனையின் ஒரு சில உள்ளடக்கங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பல்வேறுபட்ட சிக்கல் நிலை காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல் முறைமையை அவற்றில் பிரதானமானவையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் முறைமை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகளும் கோரப்பட்டன. அந்த யோசனைகள் ஒவ்வொன்றும் முரண்பட்டதாக காணப்படுகிறது. ஆகவே மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் இம்மாத காலத்திற்குள் ஒரு உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களை காட்டிலும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. இச்சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்தரப்பின் ஒரு சில செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment