தேசிய அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

தேசிய அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைப்பு

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள மேலும் ஒரு தொகையினரின் அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், தேசிய அடையாள அட்டையை மே மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நபர்களின் தேசிய அடையாள அட்டைகளே பூரணப்படுத்தப்பட்டு தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இம்மாதம் 31ஆம் திகதிவரை காலம் வழங்கப்பட்டிருந்த விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை கடந்த சனிக்கிழமை தபாலில் சேர்க்கப் பட்டதாகாகவும் அதிகாரிகளின் அர்ப்பணிப்புள்ள சேவையினால் காலதாமதமின்றி குறித்த திகதிக்கு முன்னதாகவே அடையாள அட்டைகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad