பண்டாரவளை நகர பொதுச் சந்தை காலவரையறையின்றி மூடப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Saturday, May 8, 2021

பண்டாரவளை நகர பொதுச் சந்தை காலவரையறையின்றி மூடப்பட்டது

பண்டாரவளை நகர பொதுச் சந்தையை இன்று (09) முதல் காலவரையறையின்றி மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை பிராந்திய COVID-19 தொற்று கட்டுப்பாட்டு அமைப்பினால் நகர மண்டபத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நகர மேயர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பண்டாரவளை நகரில் COVID மரணங்கள் பதிவானதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை கடைத் தொகுதிகளில் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, முகக்கவசம் அணியாத 30-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரில் COVID தொற்றைக் கருத்திற்கொண்டு பிரதேச செயலகம், வீதி அதிகார சபை மற்றும் தேயிலை சபை என்பன ஏற்கனவே மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad