கீரை பறிக்கச் சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

கீரை பறிக்கச் சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!

கட்டான, ஹல்பேவில பகுதியில் களிமண் அகழப்பட்டு நீர் நிரம்பியிருந்த குழிக்குள் வீழந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கன மழை பெய்து கொண்டிருந்த போது கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கட்டான, ஹல்பே, அம்பலயாய பிரதேசத்தில் தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று (03) கனமழை பெய்து கொண்டிருந்த போது கீரை பறிப்பதற்காக மா ஓயாவிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது பெண் குழந்தை மற்றும் 8 வயதுடைய ஆண் குழந்தை ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கைவிடப்பட்டிருந்த களிமண் குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் நீர்க்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad