யாழ் - கொழும்பு ரயிலில் 7ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசனங்கள்! - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

யாழ் - கொழும்பு ரயிலில் 7ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசனங்கள்!

யாழ் - கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இரவு நேர தபால் ரயில் சேவையில் குறித்த உறங்கல் இருக்கை ஆசன வசதி கொண்ட மேலதிக பெட்டி இணைக்கப்பட்டு சேவை இடம்பெறவுள்ளன.

இந்த வசதியைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வினவியபோது, அதில் எவ்வித உண்மையும் இல்லை.

கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து மீண்டும் 1.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு 1.37 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்படும் நகர் சேர் கடுகதி ரயில் சேவை மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோல் தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad