இலங்கையில் பயணக்கட்டுப்பாடு ஜூன் 07 வரை தொடரும் ; இடையில் தளர்த்தப்படாது : நடமாடும் சேவைகள் மூலம் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு ஜூன் 07 வரை தொடரும் ; இடையில் தளர்த்தப்படாது : நடமாடும் சேவைகள் மூலம் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்ச்சியாக எதிர்வரும், ஜூன் 07ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, மே 31 மற்றும் ஜூன் 04 ஆகிய திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முடிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த மே 25ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வின்போது மக்கள் நடந்து கொண்டு விதம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என, இராணுவத் தளபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பொதுமக்களுக்கான உணவுகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அந்தந்த மாவட்டங்கள், பிரதேசங்கள், கிராம அலுவலர் பிரிவுகளின் நிர்வாகம் மூலம் நடமாடும் சேவைகளுக்கு அனுமதி வழங்குவதன் அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென, இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கொரோனா தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment