அறிக்கை வெளியானதிலிருந்து பல்வேறு கருத்துக்கள் முன்வைப்பு, நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்கிறார் கரு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

அறிக்கை வெளியானதிலிருந்து பல்வேறு கருத்துக்கள் முன்வைப்பு, நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்கிறார் கரு

(நா.தனுஜா)

நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதே உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது. தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானதிலிருந்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கரு ஜயசூரிய அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியிருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, எமது சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்களை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகளின் நோக்கமாகக் காணப்பட்டது.

எனினும் அந்த நோக்கத்திற்குப் பலியாகாமல் நாம் வெற்றி பெற்றோம். அதற்காகத் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்ட மத மற்றும் சமூகத் தலைவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இப்போதும் நாமனைவரும் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமாகும் என்று அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment