பௌத்த மதகுருமார் இன்றி நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்ற நம்பிக்கையில் அரசாங்கம் செயற்படுகிறது - அமைச்சர் இந்திக அனுருத்த - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

பௌத்த மதகுருமார் இன்றி நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்ற நம்பிக்கையில் அரசாங்கம் செயற்படுகிறது - அமைச்சர் இந்திக அனுருத்த

இந்த நாட்டின் பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு மக்கள் நிதியில் தங்கி வாழும் சிலர் ஜெனீவா யோசனைகள் ஊடாக இலங்கையை தோல்வியடையச் செய்வதற்கு வாக்களித்த நாடுகளின் ஏஜெண்டுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் அன்று நல்லாட்சியை செயல்படுத்த வந்தவர்களோடு முகாமிட்டு கூட்டிணைந்து உள்ளதாகவும், கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

புத்த சாசனம் மற்றும் பௌத்த மதகுருமார் இன்றி நாட்டுக்கு எதிர்காலம் ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செயற்படும் இன்றைய அரசாங்கம், ஜெனீவா யோசனைகள் மட்டுமல்ல நாட்டுக்கு எதிராக எந்தவிதமான சூழ்ச்சிகள் செயற்படுத்தப்பட்டாலும் பௌத்த மதகுருமார் நாட்டோடு இருந்தால் எங்களுக்கு முன்னோக்கி பயணிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புத்த சாசனத்துக்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக “மிஹிந்து நிவஹன” வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் பொலன்னறுவை மாவட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார். 

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையின் கீழ் மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கேற்ப பௌத்த விவகார அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் “மிஹிந்து நிவஹன” வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இதன் முதலாவது கட்டத்தின் கீழ் நாடு பூராகவூம் 2000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு இதற்காக 120 கோடி ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடமைப்புத் திட்ட ஆரம்ப விழாவின் போது வணக்கத்துக்குரிய மெதிரிகிரிய பிரேமானந்த தேரரின் பெற்றோருக்காக நிர்மாணிக்கப்படும் மெதிரிகிரிய, கஜபாபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 64 பௌத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு காசோலைகளும் வழங்கப்பட்டன.

பொலன்னறுவை மாவட்ட பிரதான சங்கநாயக்க இலங்கை கண்டி அமரபுர நிக்காய சிரேஷ்ட உறுப்பினர் மெதிரிகிரி பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய மெதிரிகிரிய அஸ்ஸஜி தேரர், அமரபுர சத்தம்மயுக்திக மகா நிக்காய சிரேஷ்ட உறுப்பினர் ஹிங்குரக்கொட ரஜஅலகம போதிராஜாராமாதிபதி வணக்கத்துக்குரிய பிலியந்தல பியரதன தேரர், மின்னேரியா பிரிவின் உப தலைவரான மகா அம்பகஸ்வேவ ஸ்ரீ சுகதாராமாபதி வணக்கத்துக்குரிய கனேகம நேமிந்த தேரர் உட்பட மகாசங்கத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க, மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, மெதிரிகிரிய பிரதேச சபைத் தலைவர் சாந்த குமார விக்கிரமசூரிய, பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் டப்ளியூ. ஏ. அத்துகோரள, மெதிரிகிரிய பிரதேச செயலாளர் சீ.எம். கருணாரத்ன மற்றும் பிரதேச அரசியல்வாதிகள்இ அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad