திருமண வைபவங்களை மட்டும் நடத்த அனுமதி - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

திருமண வைபவங்களை மட்டும் நடத்த அனுமதி

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி திருமண வைபவங்களை மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுமென கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்திற்கான தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

பெரும்பாலான திருமண வைபவங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை உடனடியாக நிறுத்​த முடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். 

எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி திருமண வைபவங்களை நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனைத் தவிர்ந்த வேறு எந்த உற்சவங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad