நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் - சீனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் - சீனா

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது.

அந்த வகையில் கிழக்கில் இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலளிக்கும் விதமாக இந்த பன்னாட்டு கூட்டு கடற்படை பயிற்சி நடப்பதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் இந்த கூட்டு கடற்படை பயிற்சி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் ‘‘நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்’’ என பதிலளித்தார்.

No comments:

Post a Comment