வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முப்பெரும் விழா - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முப்பெரும் விழா

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கலாசார விழாவும் இளம் பரிதி சஞ்சிகை வெளியீடும் பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு ஆகிய முப்பெரும் விழா செயலக கேட்போர கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரும், எழுத்தாளருமான திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர எஸ்.கங்காதரன், செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இளம் பரிதி சஞ்சிகை பிரதேச செயலாளரினால் உதவிப் பிரதேச செயலாளருக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.

இளம் பரிதி சஞ்சிகை வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியலாளர்கள் ஆகியோர்களது விபரங்கள் அடங்கியவாறு வெளியிடப்பட்டதுடன், இதன் பிரதிகள் வழங்கி கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாணவர்களின், நடங்கள், கும்பிபாடல்கள் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், கலை நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad