93 ஆவது ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு : சிறந்த இயக்குநர் விருது வென்றார் சீனப் பெண் - முழு விபரம் இதோ ! - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

93 ஆவது ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு : சிறந்த இயக்குநர் விருது வென்றார் சீனப் பெண் - முழு விபரம் இதோ !

93 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார்.

திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இன்று காலை 5.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளர் இன்றி இடம்பெற்று வருகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஒஸ்கர் விருது விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிறந்த இயக்குனர் விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார்.
சிறந்த துணை நடிகர் Judas and the Black Messiah படத்துக்காக டேனியல் கல்லூயா பெற்றார்.
சிறந்த திரைக்கதைக்கான விருதை Promising Young Woman படத்துக்காக எமரால்டு பென்னல் பெற்றார்.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை The Father படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன் பெற்றார்.
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை Another Round பெற்றது.
தொடர்ந்து பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சி ஒஸ்கார் அதிகாரபூர்வ இணையத்தளம் மற்றும் ஒஸ்கார் சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment