மங்கள சமரவீரவின் பாதையில் பயணிக்கவா 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்? - அமைச்சர் விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

மங்கள சமரவீரவின் பாதையில் பயணிக்கவா 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்? - அமைச்சர் விமல் வீரவன்ச

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாட்டை காட்டிக் கொடுத்ததாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சதித்திட்டத்தின் கீழ்தான் நாட்டுக்கு எதிராகவும் இராணுவத்தினருக்கு எதிராகவும் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மங்கள சமரவீர கையை உயர்த்திருந்தார். 

அப்போதைய பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் மாத்திரமே கலந்துரையாடி மங்கள சமரவீர இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருந்தார். ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையில் எவ்வித அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை.

மங்கள சமரவீர ஜெனிவா சென்று இவ்வாறு காட்டிக் கொடுத்ததன் காரணமாகவே இராணுவ வீரர்களை வரிசையாக சிறையில் அடைத்தனர். புலனாய்வுப் பிரிவை சீர்குலைத்தனர். அதனையா மங்கள சமரவீர எம்மையும் செய்ய சொல்கிறார்? அதற்காகதான் எமது அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தனரா? 

மங்கள சமரவீரவின் பாதையில் பயணிக்கவா 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்? இது மேற்கத்தேயே அடிமை முறைக்கு எதிராக செயற்படும் அரசாங்கமாகும்.

மேற்கத்தேய நாடுகள் கூறும் சமாதான வழியில் சென்று நாட்டை பிரித்துக் கொடுத்திருந்தால் சமாதானத்துக்கான நோபால் பரிசுதான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்திருக்கும். 

அவர் நோபல் சமாதான பரிசை பெற்றுக் கொள்ள நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு மாறாக தீவிரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வழியை பின்பற்றியதால்தான் இன்று அனைத்து இனங்களும் நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்றன என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment