இந்தியாவுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

இந்தியாவுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் அமைக்கப்பட்ட நிதி திரட்டும் திட்டமான பி.எம். கேர்ஸுக்கு 50,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த நன்கொடையினை அவர் வைத்தியசாலையில் ஆக்ஸின் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இதுபோன்ற பங்களிப்பை பகிரங்கமாக அறிவித்த முதல் கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் ஆவார்.

அவர் நன்கொடையினை வழங்கியது மாத்திரமன்றி தனது சக ஐ.பி.எல். வீரர்களையும் பங்களிப்பு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பேட் கம்மின்ஸ், “இந்தியாவுடனான எனது அன்பு, கடந்த சில ஆண்டுகளாக இணக்கம் அடைந்து வருகிறது. இங்குள்ள மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து சொல்ல மாளாத துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன்.

மக்கள் தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஐ.பி.எல். தொடர் நடத்துவது தேவை தானா? அது பொருத்தமானதா? என்ற விவாதம் எல்லாம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.பி.எல் தொடர் மக்களின் வாட்டத்தை ஒரு நாளில் சில மணி நேரமாவது போக்கும் என நம்புகிறேன்.

இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். இந்த நிதியை இந்திய வைத்தியசாலைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுங்கள்.

என்னுடன் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனபான்மையை கண்டறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். என்னால் முடிந்தது 50000 அமெரிக்க டாலர். இது ஒரு தொடக்கம் தான்.

நமது உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து மக்களின் வாழ்வில் ஒளி சேர்ப்போம். எனது பங்களிப்பு பெரிய திட்டங்களை செயல்படுத்த எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சிலரது வாழ்வில் ஒரு சின்ன மாற்றமாக இது இருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment