5,000 ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வழங்கத் திட்டம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

5,000 ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வழங்கத் திட்டம்

5000 ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனைப் பெற தகுதி பெற்றும் இதுவரை அதனைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

ஐயாயிரம் ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவு 25 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் உள்ள குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad