விசேட கண்காணிப்பு நடவடிக்கைக்கமைய 4,511 குற்றச்சாட்டுக்கள் பதிவு : 24 மணித்தியாலத்தில் 10 வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

விசேட கண்காணிப்பு நடவடிக்கைக்கமைய 4,511 குற்றச்சாட்டுக்கள் பதிவு : 24 மணித்தியாலத்தில் 10 வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழப்பு

(செ.தேன்மொழி)

மோட்டார் சைக்கிள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்மைய, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 4,511 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி ஏற்படும் இழப்புக்களை தவிர்ப்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையானது இன்றையதினம் வரை இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்று காலை ஆறு மணியுடன் நிறவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 4,511 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக 1,22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தலைக் கவசம் அணியாமல் இருந்ததாக 6,50 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதி ஒழுங்கு விதிகளை முறையாக பேணாமை தொடர்பில் 1,021 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 10 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 5 பாதசாரதிகளும், மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர், முச்சக்கர வண்டியில் சென்ற 3 பேர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தற்போது மோட்டார் சைக்கிள்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை சிரமத்துக்குள்ளாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானம் கிடையாது.

விபத்துகளினால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment