சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முயன்ற 20 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முயன்ற 20 பேர் கைது

சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்றுமுன்தினம் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது, கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நான்கு முச்சக்கர வண்டிகளை இடைநிறுத்திய கடற்படையினர் அவர்களிடம் மேற்கொண்ட சோதனைகளின்போதே சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் 16 வயது சிறுவன் உட்பட 15 ஆண்களும், 13 வயது சிறுமி உட்பட ஐந்து பெண்களும் அடங்குவர்.

அத்துடன் அவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வத்தளை, புத்தளம் மற்றும் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சட்டவிரோத வெளியேற்ற முயற்சியை உருவாக்கிய ஒருவரும் கைது செய்யப்பட்ட குழுவில் அடங்குவார்.

கைதான நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டி என்பன சிலாம் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad