பங்களாதேஷ் பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

பங்களாதேஷ் பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் பயணமானார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பி பேரில் அங்கு விஜயம் செய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 19 மற்றும் நாளை 20ஆம் திகதிகளில் பங்களாதேஷில் தங்கியிருப்பதுடன் அந்நாட்டின் தேச பிதாவான ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழாவிலும் பங்களாதேஷ் சுதந்திர பொன்விழா நிகழ்வுகளிலும் விசேட அதிதியாக கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

தேச பிதாவான ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வினையும், பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர கொண்டாட்டத்தையும் முன்னிட்டு அறிவித்துள்ள நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை நிகழ்த்தவும் உள்ளார்.

இவ்விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் அமீன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர் ஆகிய உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சுகாதாரம், விவசாயம், வியாபாராம் மற்றும் முதலீடு,பாதுகாப்பு , சமுத்திர பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுலா என பல்துறைசார் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெறவுள்ளன.

இவ்விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் உயர்மட்ட தலைவர்களை மையப்படுத்தி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை இலங்கைக்கும் பங்களாதேஷ் நாட்டுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி, விவசாயம்,தொழிற்துறை விருத்தி, சுகாதாரம், தொடர்பாடல் ஆகிய துறைகள் தொடர்பிலான இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

பங்களாதேஸ் நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மரியாதை செலுத்தவுள்ளார். அத்துடன் பங்கபந்துவின் நினைவு நூதனசாலைக்கும் பிரதமர் செல்லவுள்ளார்.

1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் ஒரு தனி குடியரசு நாடாக உருவாக்கப்பட்டதுடன் அதனையடுத்து அதன் மறு ஆண்டே இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. 

இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு அடுத்த வருடம் நினைவு கூறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பிரதமரின் பங்களாதேஷ் விஜயம் அமையவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad