நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதில் ஒருவர் பலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதில் ஒருவர் பலி

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஐந்தாம் கட்டை பகுதியில் வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த கே அந்தோணிசாமி (48 வயது) உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் காரின் சாரதியை கைது செய்துள்ளதாக சீனக்குடா போலிசார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad