பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒன்றிய இணையத்தளம் உதயமானது - பிரதமர், சபாநாயகர் தலைமையில் அங்குரார்ப்பணம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒன்றிய இணையத்தளம் உதயமானது - பிரதமர், சபாநாயகர் தலைமையில் அங்குரார்ப்பணம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (https://slwpc.org/) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் தலைமையில் (09) பாராளுமன்றத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பர்னாந்துபுள்ளேயின் அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் தலைமையில் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதித் தலைவர்களான திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, டயனா கமகே, கோகிலா குணவர்த்தன, முதிதா பிரிஸான்தி, ராஜிகா விக்கிரமசிங்ஹ மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹனதீர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad