ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மகளிர் அபிவிருத்தி நிலைய பிரதேச மட்ட கண்காட்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மகளிர் அபிவிருத்தி நிலைய பிரதேச மட்ட கண்காட்சி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மகளிர் அபிவிருத்தி நிலைய பிரதேச மட்ட கண்காட்சி மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் வியாழக்கிழமை முழு நாளாக இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் நா.தனஞ்ஜெயன், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மோகன் பிரேம்குமார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் டீ.தரணிதரன், நிலைய தையல் போதனாசிரியர் திருமதி.றாஹிலா நஜீம், செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி நிலைய பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ஆடை அலங்காரங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் என்பன கண்காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், விற்பனையும் செய்யப்பட்டது.

இதன்போது தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு டிப்ளோமா தரச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் தையல் பயிற்சியை நிறைவு செய்ய மாணவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பயிற்சி நெறியில் முப்பது மாணவர்கள் ஒரு வருட பயிற்சி நெறியில் கலந்து கொண்டதுடன், இவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக முன்னூறு ரூபாய் வழங்கி வைக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

No comments:

Post a Comment