இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய இளைஞர் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய இளைஞர் சடலமாக மீட்பு

அநுராதபுரம் விகார ஹல்மில்லகுளம் பியந்த மாவத்தையைச் சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத் பிரசாத் குமார (24 வயது) எனும் இளைஞன் திருகோணமலை முதலியார்குளம் குளத்துக்கு அருகில் இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வரும் இவர் குடும்பத்தகராறு காரணமாக அவர் கடமையாற்றிக் கொண்டிருந்த இடத்துக்கு முன்னாலுள்ள குளத்துக்கு அருகில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி வருகை தந்து மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்த சடலத்தை பார்வையிட்டதாகவும் மரணத்தில் எதுவித சந்தேகமும் இல்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் கூறியதை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment