மத்ரஸாக்களில் அடிப்படைவாதமா? - ஆராயுமாறு மூன்று அமைச்சுகளுக்கு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

மத்ரஸாக்களில் அடிப்படைவாதமா? - ஆராயுமாறு மூன்று அமைச்சுகளுக்கு பணிப்பு

நாட்டில் இயங்­கி­ வரும் மத்­ர­ஸாக்­களில் 1000 மத்­ர­ஸாக்­களை தடை செய்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும், மத்­ர­ஸாக்­களில் அடிப்படைவாதம் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பொது­மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்­ வீ­ர­சே­கர கருத்து வெளி­யிட்­டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆரா­யு­மாறு மூன்று அமைச்­சு­களை அரசாங்கம் கோரியுள்­ளது.

பாது­காப்பு அமைச்சு, கல்­வி­ய­மைச்சு, புத்­த­சா­சன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் செய­லா­ளர்கள் இது­ தொ­டர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. 

நாட்டில் இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்­கி­டையில் நட்­பு­ற­வினை கட்டியெ­ழுப்­பு­வ­தற்கும், பயங்­க­ர­வாதம் மற்றும் தீவி­ர­வா­தத்தைக் களைந்து தேசிய பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்­காக அறிக்கையொன்­றினைத் தயா­ரிக்­கு­மாறு பாரா­ளு­மன்ற தேசிய பாது­காப்பு பற்­றிய துறைசார் மேற்­பார்வைக் குழு­வொன்று நியமிக்கப்­பட்­டது. 

அக்­குழு தனது அறிக்­கையை 2020 பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திகதி அரசாங்­கத்­திடம் கைய­ளித்­துள்­ளது

இக்­கு­ழுவில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ். தெளபீக், மொஹமட் மன்சூர் உட்­பட 17 பேர் அங்கம் வகித்­தனர். அக்­கு­ழுவின் அறிக்­கை­யை­ய­டுத்தே குறிப்­பிட்ட மூன்று அமைச்­சு­களும் மத்­ரஸா தொடர்­பான நட­வ­டிக்­கை­களை ஆராய்ந்து தீர்­மானம் மேற்கொள்ளுமாறு கோரப்­பட்­டுள்­ளது

‘மத்­ரஸா நிறு­வ­னங்கள் தொடர்பில் தேசிய பாது­காப்பு பற்­றிய துறைசார் மேற்­பார்வை குழு­வினால் ஆரா­யப்­பட்­ட­போது முஸ்லிம் அலு­வல்கள் அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களம் அல்­லது வேறு எந்­த­வொரு அரச நிறு­வ­னத்­தி­டமும் இலங்­கை­யி­லுள்ள மத்­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை பற்றி எவ்­வித ஏற்றுக் ­கொள்­ளக் ­கூ­டிய அறிக்­கையும் இல்லை” என தேசிய பாதுகாப்பு பற்­றிய துறைசார் மேற்­பார்­வைக்­கு­ழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள ‘மத்­ர­ஸாக்­களில் இருக்கின்ற சிறு­வர்­களின் எண்­ணிக்கை, அவற்­றினால் வழங்கப்படும் கல்­வியின் உள்­ள­டக்கம் மற்றும் தரம், ஆசிரியர்களின் எண்­ணிக்கை, ஆசி­ரி­யர்­களின் தகை­மைகள், சிறுவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற அடிப்­படை வச­திகள் போதிப்­பது உள்­நாட்டு ஆசி­ரி­யர்­களா? அல்­லது வெளி­நாட்டு ஆசி­ரி­யர்­களா? என்பதில் பல பிரச்­சி­னைகள் இருப்­ப­தாக புல­னா­கி­றது.

குழுவின் முன் முஸ்லிம் கல்­வி­மான்கள் முன்­வைத்த, சுட்­டிக்­காட்­டிய விட­யங்­க­ளின்­படி நிர்க்­கதி நிலை­யி­லுள்ள பிள்­ளை­களை பராமரிப்பதற்கு அனுப்பப்படுகின்ற இடமாக மத்ரஸாக்கள் மாறியுள்ளன என்பதாகும்.

மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் பிரிவெனா கல்வி பிரிவுபோன்றதொரு பிரிவாக மாற்றியமைத்து முகாமைத்துவம் செய்யப்படுதல் வேண்டும் என்ற பிரேரணையொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment