பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த பிரதமர் மஹிந்த - இராஜதந்திர உறவு, வாணிப, முதலீடு குறித்து விசேட கவனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த பிரதமர் மஹிந்த - இராஜதந்திர உறவு, வாணிப, முதலீடு குறித்து விசேட கவனம்

பங்களாதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரை சந்தித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் பிரதமருடன் ஜீ.எல்.பீரிஸ், அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் (2021.03.19) பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநரை ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்களாதேஷ் நாட்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஏ.கே.அப்துல் மோமனுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை நேற்று பகல் டாக்கா நகரில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கைக்கும், பங்களாதேஸூக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, வாணிப மற்றும் முதலீடு ஆகிய துறைகளின் இரு தரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும், பங்களாதேஸூக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுடன் 50 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இவ்வுறவை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வது அவசியமானதாகும் என இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த காலங்களில் பங்களாதேஸ் நாட்டின் பொருளதார வளர்ச்சி தொடர்பில் பிரதமர மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தினார்.

இலங்கையின் முதலீட்டாளர்கள் பலர் பங்களாதேஸில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளமை இரு நாட்டின் வாணிப துறையின் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறதுஎனவும் குறிப்பிட்டார்.

பங்களாதேஸூக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டது.ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment