ரமழான் காலத்தை முன்னிட்டு வீதி மின் விளக்குகளை திருத்தும் பணி - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

ரமழான் காலத்தை முன்னிட்டு வீதி மின் விளக்குகளை திருத்தும் பணி

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை மாவடிச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் ரமழான் காலத்தை முன்னிட்டு வீதி மின் விளக்குகளை திருத்தும் பணி நடைபெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடம் பிரதேச சபை உறுப்பினர் எம்.கபூர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ரமழான் காலத்தை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பு கருதி வீதி மின் விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டது.

செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டாரத்தில் காணப்படும் மின் விளக்குகள் பழுதடைந்து காணப்படின் மின் கம்ப இலக்கத்தோடு எமக்கு அறியத்தரும் பட்சத்தில் வீதி மின் விளக்குகளை திருத்தம் செய்யப்படும் என்று பிரதேச சபை உறுப்பினர் எம்.கபூர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad