வெளியானது O/L பரீட்சைக்கான சுகாதார வழிகாட்டல்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

வெளியானது O/L பரீட்சைக்கான சுகாதார வழிகாட்டல்கள்

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பாதுகாப்பு சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு நேற்றையதினம் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டல், மே 2020 இல் வெளியிடப்பட்ட 'தேந்தெடுக்கப்பட்ட பொது நடவடிக்கைகளில் / வேலைத்தளங்களில் கொவிட்19 தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான வழிகாட்டல்கள் - தேர்வுகளை நடத்துதல் என்பதற்கு மேலதிகமானது.

இந்த வழிகாட்டல், கல்வி அமைச்சின் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை விசேட இலக்காகக் கொண்டது. மேலும் பொதுமக்களுக்கான கொவிட் தடுப்பதற்கான பொதுவான வழிகாட்டல்களையும் கொண்டமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad