கைவிடப்பட்டது புகையிரத நிலைய அதிபர் சங்க போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

கைவிடப்பட்டது புகையிரத நிலைய அதிபர் சங்க போராட்டம்

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத நிலைய அதிபர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத் தருவதாக போக்கு வரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கனிஷ்ட சேவை ஊழியர்களுக்கான சேவை வெற்றிடம் குறித்து போக்கு வரத்து அமைச்சர் புகையிரத திணைக்களத்திடம் எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் அறிக்கை கோரியுள்ளார் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புகையிரத சேவையில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு சேவையாளர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிடின் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் புகையிரத சேவையில் ஈடுபடுவோம் என அறிவித்து சட்டப்படி வேலையில் நேற்று வியாழக்கிழமை முதல் ஈடுபட்டோம்.

48 மணித்தியாலத்துக்குள் தீர்வை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் குறிப்பிட்டோம்.

இவ்விடயம் தொடர்பில் போக்கு வரத்து அமைச்சர், போக்கு வரத்து அமைச்சின் செயலாளர், புகையிரத திணைக்கள பொது முகாமையாளர், புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினரை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை நேற்று போக்கு வரத்து அமைச்சில் இடம் பெற்றது.

புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் நெடுங்காலமாக முன்வைத்து வரும் கோரிக்கைகளுக்கு தீர்வை பெறுவது கட்டாயமாகும். ஒரு சில கோரிக்கைகளுக்கான தீர்வை விரைவில் பெற முடியாது. ஆகவே விரைவாக செயற்படுத்தும் விடயங்களை நிறைவேற்ற உரிய கவனம் செலுத்தப்படும் என்றார்.

புகையிரத சேவையில் கனிஷ்ட சேவையாளர் பிரிவில் 1000 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகிறது. இப்பிரிவுக்கு இளைஞர்களை இணைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயம் குறித்து எதிர்வரும் செவ்வாய்கிழமை புகையிரத திணைக்களம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்கு வரத்து அமைச்சர் புகையிரத திணைக்கள பொது முகாமையாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என போக்கு வரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையினை கைவிட்டுள்ளோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய செயற்படாவிடின் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment