திருகோணமலை எண்ணெய் தாங்கி, இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

திருகோணமலை எண்ணெய் தாங்கி, இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு

இந்தியாவும் இலங்கையும் இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பில் இணைந்து செயற்பட இந்தியா தயாராகவுள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள எண்ணெய்த் தாங்கியின் இரு நாட்டு கூட்டு அபிவிருத்தி தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் பதிலளித்துள்ள, இந்திய உயர் ஸ்தானிகராலய செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கை மற்றும் இந்தியா, எரிசக்தி தொடர்பிலான கூட்டாண்மையை தங்களது ஒத்துழைப்பின் முன்னுரிமை பரிமாணங்களில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளளதாகவும், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி பண்ணையின் (Upper Oil Tank Farms) அபிவிருத்தி மற்றும் செயல்பாட்டில், இரு தரப்பும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கையுடனான ஆக்கபூர்வமான தொடர்பைத் தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment