ஐ.நா வாகனத் தொடரணி மீது தாக்குதல் : ஐந்து படையினர் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

ஐ.நா வாகனத் தொடரணி மீது தாக்குதல் : ஐந்து படையினர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத் தொடரணி மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் அந்த சர்வதேச நிறுவனத்தின் வாகனங்களுக்கு பாதுகாப்பாகச் சென்ற ஐந்து ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுரோபி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குலின் பின்னணியில் தலிபான்கள் இருப்பதாக ஆப்கான் உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

ஐ.நா வாகனத் தொடரணி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானபோது ஒட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அவர் ஓட்டிச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி ஆற்றுக்குள் வழுந்ததிலேயே மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையே கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் சூழலிலேயே ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

வன்முறைகள் காரணமாக இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்தம்பித்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த அமைதிச் செயற்பாடுகளை கையாள்வது தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தீர்மானித்துள்ளார்.

No comments:

Post a Comment