ஐக்கிய அரபு இராச்சியத்தின் விண்கல பணிகளுக்கு தலைமை தாங்கிய இளம் அமைச்சரான பெண் விஞ்ஞானி - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

ஐக்கிய அரபு இராச்சியத்தின் விண்கல பணிகளுக்கு தலைமை தாங்கிய இளம் அமைச்சரான பெண் விஞ்ஞானி

ஐக்கிய அரபு இராச்சியம் சமீபத்தில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலத்தை அனுப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த பணி 2014 இல் அறிவிக்கப்பட்டது. ‘ஹோப்” ( Hope ) விண்கலம் பெப்ரவரி 9 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து வெற்றி பெற்றது.

இந்தத் திட்டத்தை சாரா அல் அமீரி எனும் 33 வயது இளம் பெண் விஞ்ஞானி தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

சாரா பின்த் யூசிப் அல் அமீரி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் நாட்டின் விண்வெளி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.

33 வயதான சாரா அல் அமீரி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் விண்வெளி நிறுவனமான ‘ஹோப்” (Hope) அல்லது (அல் அமல்) விண்கலத்தை உருவாக்கிய, கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம், கலிபோர்னியா-பெர்க்லி பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்த முகமது பின் ரஷீத் விண்வெளி நிலையத்தினத்தின் தலைவராகவும் உள்ளார்.

ஈரானில் பிறந்த சாரா அல் அமீரி உலகிலேயே இளம் அமைச்சர்களில் ஒருவராகவும், விண்வெளி நிறுவனத்தை வழிநடத்தும் இளம் பெண்ணாகவும் உள்ளார்.

ஷார்ஜாவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 2008 இல் கணினி பொறியியலில் அறிவியல் பட்டம் பெற்ற பிறகு, அல் அமீரி எமிரேட்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (ஈஐஏஎஸ்டி) இல் திட்ட பொறியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அங்கு பணியாற்றிய வேளை, நாட்டின் முதல் இரண்டு செயற்கைக் கோள்களான துபாய்சாட் -1 மற்றும் துபாய்சாட் -2 இரண்டிலும் பணியாற்றினார். அவர் கலீஃபாசாட் அல்லது துபாய்சாட் -3 ஐ உருவாக்கிய குழுவில் அங்கம் வகித்து எட்வான்ஸ் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் அவர் 2014 இல் கணினி பொறியியலில் அறிவியல் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அதே நேரத்தில் முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்தில் விண்வெளி அறிவியல் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். அங்கு அவர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை அமைத்து அதன் இயக்குநராக செயல்பட்டுள்ளார்.

அமைப்பின் ஒரு பகுதியாக, "அறிவு சார்ந்த பொருளாதாரத்தை" வளர்ப்பதற்கான நாட்டின் இலக்கை நோக்கி அவர் பணியாற்றியுள்ளார். 

2117 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை உருவாக்குவதற்கான திட்டங்களும் இந்த இலக்கை உள்ளடக்கியது. பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக, செவ்வாய் கிரக நிலைமைகளை உருவகப்படுத்த டுபாய் பாலைவனங்களில் ஒரு ‘அறிவியல் நகரம்’ கட்ட நாடு திட்டமிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில், அல் அமீரி நாட்டின் விண்வெளி மையத்தில் மேம்பட்ட வான்வழி அமைப்புகளுக்கான நிரல் மேலாளரானார். விண்வெளி ஏஜென்சிக்கு பொறியியல் குழுவை ஒன்றிணைக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது.

பின்னர் அவர் 2016 இல் எமிரேட்ஸ் அறிவியல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment