அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது முறையாகவும் பொது முடக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது முறையாகவும் பொது முடக்கம்

பிரிட்டனின் கொரோனா திரிபு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது முறையாகவும் பொது முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஹோட்டல் ஒன்றில் இருந்து மரபணு மாற்றம் பெற்ற இந்த கொவிட்-19 தொற்று சமூகத்தில் பரவி இருப்பதாக நம்பப்படுகிறது.

மெல்போர்ன் ஹோட்டல் ஒன்றில் அடையாளம் காணப்படாது இருந்த தொழிலாளர் ஒருவரிடம் இருந்து பரவிய 13 தொற்றுச் சம்பவங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனை அடுத்து விக்டோரியாவில் நேற்று முடக்கம் அமுலுக்கு வந்ததோடு அது வரும் புதன்கிழமை வரை நீடிக்கவுள்ளது.

எனினும் அந்த மாநிலத் தலைநகர் மெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னில் போட்டி தொடர்ந்து இடம்பெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. எனினும் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 28 நாட்களில் விக்டோரியாவில் உள்ளூரில் கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகாத நிலையில் அந்த மாநிலம் பெருமளவில் தொற்று பரவலை கட்டுப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment